தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி ஆகிய 9 மாவட்டங்களில் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வளிமண்டல கீழடித்து சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக வெள்ளக்கோவிலில் 7 சென்டிமீட்டர் மழையும், தென்பர நாடு (திருச்சி), பெரியகுளத்தில் தலா 5 சென்டிமீட்டர் மழையும் பதிவானது.