தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.இந்நிலையில் துணை ஆட்சியர் மற்றும் டிஎஸ்பி உள்ளிட்ட 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700
வயது: 21-40
கல்வித் தகுதி: டிகிரி, டிப்ளமோ
தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல், அக்டோபர் 30 முதல் நிலை தேர்வு நடைபெறும்
விண்ணப்ப கட்டணம்: ரூ.150
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 22
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.