Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் TNPSC வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!!

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது.  கொரோனா காரணமாக பல தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா குறைந்துள்ளதால் தேர்வுக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. அந்தவகையில்  2022 பிப்ரவரியில் குரூப் 2 தேர்வுகள், மார்ச்சில் குரூப் 4 தேர்வு நடைபெறும். அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். அப்ஜெக்டிவ்  முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குரூப் 1 முதன்மை தேர்வு 2022 மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப்-1 வரிசையில் வரும் 66 பணியிடங்களுக்கு நடைபெற்ற முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 3,800 பேருக்கு மார்ச்சில் முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ்களை  டிசம்பர் 22 இல் இருந்து ஜனவரி 5 க்குள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |