Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தை நோக்கி வருகிறது…. சற்றுமுன் திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை தொடரும். நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் இரண்டாம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |