தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையால் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை எடுத்து வாங்கியது.தென்மேற்கு பருவமழை முடிந்த பிறகும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டை விட அதிக புயல்கள் உருவாகும் எனவும் எச்சரித்துள்ளது. கடந்த காலங்களில் கஜா, வர்தா புயல்கள் பல்வேறு பாடங்கள் கற்றுக் கொடுத்துள்ளதால் மிகப் பெரிய புயல் உருவாவதற்கு முன்பு அரசு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.