Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும்….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பி.இ, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்வதற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்று முன் அறிவித்துள்ளார். 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நேற்றுடன் அவகாசம் முடிவடைந்தது. அதனைப் போலவே பொறியியல் கல்லூரிகளில் சேர கடைசி தேதி ஜூலை 17 என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்னும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் மாணவர்கள் கோரிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்வதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |