தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோயில் இடங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ரூபாய் 500 கோடி மதிப்புள்ள 79 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில் இடங்களில் உள்ள கடைகள் உள்ளிட்டவைகளுக்கு மறுபரிசீலனை செய்து புதிய வாடகை நிர்ணயிக்கப்படும். கடந்த ஆட்சியில் கோயில் இடங்கள் குறைந்த விலைக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.