தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூலை 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜிகா மற்றும் டெங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார். மேலும் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து தூய்மைப்படுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்று மெல்ல அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஜிகா வைரஸ் மற்றும் டெங்கு வைரஸை கட்டுப்படுத்தும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்குமாறு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.