தமிழகத்தில் கொரோனாவை ஒழிப்பதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மக்களும் ஆர்வமாக முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இவ்வாறு தடுப்பூசி போடுபவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோய்க்கு என அரசு சார்பில் தனியாக டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் பயனடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.