தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆடிப்பூரத்தையொட்டி இன்று கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக ஆடி பூரம் திருவிழாவை பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. ஆனால் திருவிழாவை கண்டுகளிக்கும் வகையில் இணையதளம் வழியாக ஒளிபரப்பப்படும் என அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.