தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஜூலை 28-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் 28ம் தேதியும், தமிழகம் முழுவதும் 29ஆம் தேதி முதலும் இந்த திட்டம் தொடங்குகிறது. பெரும்பாலான மருத்துவமனைகள் சிஎஸ்ஆர் உடன் இணைந்து இந்தத் திட்டத்தை உடனடியாக தொடங்க இருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.