தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றது திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசு அவ்வப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து வைத்து பயன்படுத்த அணைகள் இல்லா மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகள் நலன் கருதி பல ஆண்டுகளாக சீரமைக்கபடாமல் உள்ள நீர்நிலைகளை உடனே செப்பனிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.