தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு சேவை கட்டண சீட்டுகள் வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மின்னணு முறையில் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. அந்தந்த கோவில் பெயரிலேயே ரசீதுகள் வழங்கப்பட வேண்டும். கட்டணத்தை இணைய வழியில் செலுத்துவதை திறம்பட கண்காணிக்க வேண்டும். இணையவழி பதிவை கோவில்கள் ஊக்குவிக்க வேண்டும்.
இதற்கான அறிவிப்பு பலகையை பக்தர்கள் எளிதில் அறியும் வகையில் ஆங்காங்கே வைக்க வேண்டும் என அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் திருக்கோவில்களில் கையால் எழுதும் பிரஸிடு முறை நீக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் கணினி வழியாக மட்டுமே வழங்கப்படும். அதனால் பக்தர்கள் எளிய முறையில் கோவில்களில் தினசரி நடைபெறும் சேவை கட்டணங்களை எளிதாக பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.