Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் கட்டணம் குறைப்பு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதி தீவிரமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. அதன் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதுமட்டுமல்லாமல் லேசான கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் சில மக்கள், பரிசோதனை செய்வதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பரிசோதனை செய்யத் தயங்குகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்து  தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கான பரிசோதனை கட்டணம் ரூ.800-இல் இருந்து 550 ரூபாயாகவும், குழு மாதிரிக்கான கட்டணம் 600 ரூபாயிலிருந்து 400 ஆக, முதல்வரின் காப்பீடு பயனாளிகளாக இல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.1,200 இல் இருந்து ரூ.900 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |