தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வருகிறார். மேலும் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் அல்லாத படுக்கை – ரூ.3,000, தீவிரமில்லாத ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை ரூ.7000, வென்டிலேட்டர் உடன் கூடிய சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதி – ரூ.15,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.