அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, நிகழ்வாண்டின் செமஸ்டர் தேர்வுகள் மட்டும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டன. ஆனால் அரியர் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்று கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் எத்தனை பேர்? தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? என்ற கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அரியர் தேர்வுகளை நடத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.