தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் பெரும் மழை பெய்து வருகிறது. இந்த மழைக் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி மற்றும் அவர்களுக்கு இருப்பிடம் உணவு வசதிகளை ஏற்படுத்தும், மலையில் சரியும் மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி அனைத்து துறையினரும் இணைந்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உயிர் காக்கும் மருந்துகள், உபகரணங்கள், பாம்பு கடிக்கான மருந்து மற்றும் ஆக்ஸிஜன் உருளைகள் தயாராக வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை போதிய அளவில் இருப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.