நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள காரணத்தால், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.
அந்தக் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு சற்றுமுன் அமலுக்கு வந்தது. அதன்படி இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கும் உரிய ஆதாரத்தை காண்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் இரவு நேர ஊரடங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.