தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் செயல்படும் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் அனைத்து முதியோர் இல்லங்கள் மற்றும் காப்பகங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரவை பின்பற்றி பதிவு செய்ய தவறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். காப்பகங்கள் பதிவு தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளது.