Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகம் முழுவதும் தடை…. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழகம் முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழகம் முழுவதும் ஆர்.எஸ் .எஸ் உட்பட அந்த அமைப்பும் ஊர்வலம் நடத்தக்கூடாது என தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவிட்டிருந்தது. முன்னதாக போலீசாரும் பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ் .எஸ் ஊர்வலம் நடத்த தடை விதித்தனர்..

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.. அதாவது, நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை என்பதால் உடனடியாக இந்த வழக்கை விசாரித்து அனுமதி வழங்கி உத்தரவிட  வேண்டும் என்று நீதிபதி இளந்திரையன் முன் ஆர்எஸ்எஸ்  தரப்பு வழக்கறிஞர்கள் எஸ்.பிரபாகரன், ரபு மனோகர், சந்திரசேகர் ஆகியோர் ஆஜராகி முறையிட்டனர்..

இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அவர்களுக்கு நீதிபதி அனுமதி வழங்கி இருக்கிறார். இந்த அவமதிப்பு வழக்கு என்பது மனு எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின் நாளை விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.. அதாவது, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவை எதிர்த்து தனியாக வழக்கு தொடரலாம் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். ஆர் எஸ் எஸ் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்கள் முறையிட்ட போது, சொல்லப்பட்ட விஷயங்கள் என்னவென்றால் நேற்றைய தினம் கூட சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் எல்லாம் நடைபெற்றது. மற்ற கட்சி காரர்கள் போராட்டம் என்றால் அனுமதிக்கப்படுகிறது.

ஆனால் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு மட்டுமே குறிப்பிட்டு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதையெல்லாம் கேட்ட நீதிபதி அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து வேண்டுமானால் தனியாக மனு தாக்கல் செய்யுங்கள். அதே நேரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக நீங்கள் நினைத்தீர்களானால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக மனு தாக்கல் செய்யுங்கள், அந்த மனு எண்ணிடும் நடைமுறைகள் எல்லாம் முடிந்த பின்னர் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |