Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், தமிழகத்தில் மக்களுக்கு தொடர்ந்து பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து, கொரோனா பரவலைத் தடுக்க பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

இந்நிலையில் காப்புத் தொகை என்ற பெயரில் டெப்பாசிட் வசூலிக்கப்படும் நிலையில், மின் இணைப்புக்கான டிபாசிட் வசூலிக்கக் கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கரூர் செய்தித்தாள் காகித ஆலையில் ஆக்சிசன் வசதி கொண்ட 150 படுக்கைகள் அமைக்கப்படும். காகித ஆலையில் 250 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |