தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 50க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 27 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு – விஜயகுமார், காஞ்சிபுரம்- எம். சுதாகர், திருப்பத்தூர்- சிபி. சக்கரவர்த்தி, ராணிப்பேட்டை- பிரகாஷ் மீனா, திருவண்ணாமலை- பவன் குமார் ரெட்டி, விழுப்புரம்- ஸ்ரீ நாதா, கடலூர்- சத்தி கணேசன், திருச்சி- மூர்த்தி, கரூர்- சுந்தரவடிவேல், பெரம்பலூர்- மணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.