தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப் பட்டு வருகின்றது. தற்போது வரை பல்வேறு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் நூலகங்களை திறக்க பொது நூலக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஏராளமானோர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து 75 நாட்களுக்கு பிறகு நூலகங்கள் திறக்கப்படுகின்றன. கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து வரும் வாசகர்கள் நூலகத்தைப் பயன்படுத்த அனுமதி கிடையாது. 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதானவர்கள் நூலகம் வர அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.