Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம்….. பெரும் பரபரப்பு….!!!!

மூலப்பொருட்கள் மற்றும் பண்டங்களின் விலை உயர்வால் தீப்பெட்டி தொழிற்சாலைகளை இன்று  முதல் 17-ம் தேதி வரை மூட உள்ளதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் 5 லட்சம் தொழிலாளர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி தயாரிப்புக்கு தேவையான பாஸ்பரஸ், குளோரைடு, மெழுகு, அட்டை, பேப்பர் ஆகியவற்றின் தொடர் விலை உயர்வை இதற்கு காரணம் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அடுத்தடுத்து பிற உயர்வால் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளில் பயன்படுத்தும் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்து விலை உயர்வு அறிவிப்பு வெளியாகி கொண்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் 30% முதல் 40% வரை உயர்ந்துள்ளது பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகள் மூடி உற்பத்தியை நிறுத்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் சுமார் 30 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படுவதுடன் ஆறு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |