தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கணிசமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஓரிரு நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 2 முதல் 8 வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஆகஸ்ட் 2 முதல் 3 பழனி மலைக்கோவில், சென்னை மற்றும் திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, திருத்தணி முருகன் கோவில் மற்றும் அழகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.