தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கருத்தை உரிமை சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. அதன்படி rte.tnscholls.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் எல்கேஜி, 1 ஆம் வகுப்பு சேர்க்கை பற்றி தனியார் பள்ளிகள் என்று உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.