Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. அரசு அதிரடி….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு பிளஸ் டூ மதிப்பெண் கணக்கீடு செய்ய 5 முறைகளை ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது. 10, 11 ஆம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண் கணக்கிட வாய்ப்பு உள்ளதாகவும், பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை தேர்வுத்துறை கேட்ட நிலையில் அதிலிருந்து அதிக அளவில் மதிப்பெண்களை எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |