தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 10 முதல் குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கப்படும். தேர்வான மாணவர்கள் ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் பள்ளியில் சேர வேண்டும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் இணையதளத்தில் வெளியிடப்படும்.