தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்ததால் மாணவர்கள் ஆன்லைனில் வழியை பாடங்களை படித்து வந்தனர். மேலும் பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனா படிப்படியாக குறைந்தத நிலையில் இந்த வருடம் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 467 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1.95 லட்சம் பேரும், பதினோராம் வகுப்பு தேர்வில் 2.50 லட்சம் பேரும், பத்தாம் வகுப்பு தேர்வில் 2.25 லட்சம் பேர் பங்கேற்கவில்லை. எனவே பங்கேற்காத மாணவர்களின் விவரங்களை சேகரித்து துணைத் தேர்வில் பங்கு கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.