தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்துகளில் நடத்துனர்கள் எச்சில் தொட்டு பயணச் சீட்டு வழங்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூரில் எச்சில் தொட்டு 57 பயணிகளுக்கு பயண சீட்டு வழங்கிய அரசு பேருந்து நடத்துனர் ஒருவருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் பயணிகள் அனைவருக்கும் எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கியுள்ளார். மேலும் அவரை பணியில் இருந்து நீக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.