தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி பேருந்துகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் ஏறும் மகளிரிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. பேருந்துகளில் பெண் பயணிகளிடம் உபசரிப்பு உடன் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிரை சரிவர நடத்த வேண்டும் என கூறியுள்ளது.