தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் தமிழக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்கான சில அறிகுறிகள் இருந்தாலும் உடனே மருத்துவமனையை மக்கள் அணுக வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் அதிக அளவு வசூல் செய்யப்படுவதாலும் மக்கள் பரிசோதனை செய்து கொள்ள தயங்குகிறார்கள். அதனால் நேற்று காலை தமிழக அரசு தமிழகம் முழுவதிலும் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரிசோதனைக்கு தனியார் ஆய்வகங்களை கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கூடுதல் கட்டணம் வசூலித்தால் 18004253993 மற்றும் கோவிட் கட்டளை மையத்தை தொடர்பு 104 புகார் அளிக்கலாம். மேலும் பொதுமக்கள் புகார் அளிக்கும் தனியார் ஆய்வகங்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.