தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் எதுவும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் தொடர்ச்சியாக நேற்று முதல் 1 -8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து வகுப்பு பள்ளிகளும் திறக்கப்பட்டதில், முதல் நாளில் மொத்தம் உள்ள 39,13,007 மாணவர்களில் 28,95,625 மாணவர்கள் (76%) வருகை வந்துள்ளனர். நேற்று பள்ளிக்கு வந்தவர்கள் இன்று வரை தேவையில்லை. நேற்று பள்ளிக்கு வராத மாணவர்கள் மட்டும் இன்று வரலாம்.சுழற்சி முறையில் பள்ளிகள் திறந்த போதிலும் அதிக அளவில் மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தந்துள்ளனர்.