தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு ஏற்கனவே மே 10 முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இதையடுத்து ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை விதித்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மின்தடை ஏற்பட்டால் பொதுமக்கள் புகார்களை 1912 என்ற கட்டணமில்லா எண்ணில் தெரிவிக்கலாம். புகைப்படத்துடன் கூடிய தகவல்களை 9445850811 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். இந்த செயலி 24 மணி நேரமும் செயல்படும் என்று கூறியுள்ளார்.