Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் மின்வெட்டு, மின்கட்டணம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மின் துறை சார்ந்த புகார்களை தெரிவிக்க மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பொதுமக்கள் 24 மணிநேரமும் மின்வெட்டு, மின் கட்டணம், மின் இணைப்பு பெறுவதில் சிக்கல், பராமரிப்பு பணிகள் என மின்சார துறை சார்ந்த அனைத்து வகை புகார்களையும் 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |