Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் மீண்டும்… சிலிண்டர் விலை அதிரடி உயர்வு… அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் இன்று சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சிலிண்டரின் விலை கடந்த சில நாட்களாகவே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின் போது மிகக் குறைவாக விற்பனை செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும், ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் 25 ரூபாய் உயர்ந்து, இன்று 810 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சிலிண்டர் விலை 100 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |