தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் கட்டமாக மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன்பிறகு செப்டம்பர் 19-ஆம் தேதி இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம், கடந்த 26ஆம் தேதி மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
இதில் அரசு நிர்ணயித்த இலக்கை விட மாபெரும் அளவிலான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டன. மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் மீண்டும் வருகின்ற அக்டோபர் 3ஆம் தேதி நான்காம் கட்ட மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இந்த அறிய வாய்ப்பை மக்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.