தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கு பதில் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்றது.
தேர்வுகள் முடிந்த பிறகு கடந்த டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரையாண்டு விடுமுறைக்குப் பின் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வகுப்புகள் நடைபெறுகின்றன. மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.