தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 10, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது,