தமிழகத்தில் ஜனவரி மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர். விவசாயிகள் அனைவருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.
அதன்படி ஏக்கர் ஒன்றுக்கு இடுபொருள் நிவாரணத்தொகை ரூ.13,500- ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மானாவரி நெற்பயிர் தவிர அனைத்து மானாவாரி பயிர்களுக்கு இடுப்பொருள் நிவாரணமாக 10,000 ரூபாய் வழங்கப்படும். பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணம் ஹெக்டேர் ஒன்றுக்கு 18 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார். முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.