அண்ணாப் பல்கலைக்கழகம் நடத்திய ஆன்லைன் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக பல மாணவர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் பல்கலைக்கழகம் மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நடந்தவற்றை விசாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார்.
அதில், மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட தேர்வு கட்டணத்தை 23 தனியார் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செலுத்தவில்லை. எனவே 23 கல்லூரிகளும் மே 24க்குள் கட்டணத்தை கட்ட வேண்டும் இல்லையெனில் கல்லூரிக்கான இணைப்பு ரத்து செய்யப்படும் என்றும், அடுத்த வருடம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட மாட்டாது என்றும் எச்சரித்துள்ளார். மேலும் பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்விற்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.