தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதனால் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருநங்கை கிரேஸ் பானு தொடர்ந்த வழக்கில், மூன்றாம் பாலினத்தவர்கள் அனைவருக்கும் 4000 ரூபாய் நிவாரணம் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தங்களுக்கு தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பு முகாம்கள் நடத்தவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.