குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலை கடைகளில் இலவச அரிசி, பருப்பு, சீனி, சமையல் எண்ணெய் போன்றவற்றின் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது. மக்களும் அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இலவச ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் 10 ரேஷன் கடைகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.