தமிழகத்தில் ஜூன் 25ஆம் தேதிக்குள் இரண்டாம் தவணை 2000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகை பொருள்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் வழங்கப்படவுள்ளதாக அறிவித்திருந்தது.
அதில் முதல் தவணை கடந்த மாதம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது தவணை ஜூன் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு ரேஷன் கடைகளில் 75 முதல் 200 பேருக்கு தினசரி மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது ரேஷன் கடைகளில் ஜூன் 25ஆம் தேதிக்குள் இரண்டாவது தவணை ரூ.2000 மற்றும் 14 வகை பொருட்களை வழங்கி முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.