தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் நாளான நாளை விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலர நல ஆணையம் அறிவித்துள்ளது.
இதுபற்றி புகார் அளிக்க மாநில, மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. 9487269279, 9442540984, 8610308192, 9444647125, 7305280011, 044-24335107 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தொழிலாளர்கள் புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.