தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறைகள் எண்கள், வாட்ஸ்அப் எண்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் மருந்து இருப்பு, படுக்கை வசதி, மருத்துவ வசதி,
ஆக்சிஜன் உள்ளவற்றை உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்க war room உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் புகார் அளிக்க தேவைகளை பெறுவதற்கு TollFree, WhatsApp எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.