தமிழகத்தில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூபாய் 90 கடந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 88.29 விற்பனையாகும் நிலையில், காட்டுமன்னார்கோவில் அருகே குமாராட்சியில் பெட்ரோல் விலை புதிய உச்சமாக ரூபாய் 90 .3 ரூபாய்க்கும், கடலூரில் ரூ.90.14 விற்பனையாகிறது.