கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கொடியை கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவரையும் கொடூரமாக தாக்கி வருகிறது. அதனால் தற்போது வரை அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கடந்த 6 ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இதனையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதால் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.