தமிழகத்தில் குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்கள் அனைவரும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி, மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு, மேற்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு இரண்டு லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்பு மாணவர்களுடைய மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மாணவர்கள் அனைவரும் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.