Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ்…. சற்றுமுன் வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதிமுக ஆட்சியின் போது 2018, 2019 ஆண்டுகளில் லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச போனஸ் மற்றும் கருணைத் தொகை என 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் எப்போது அறிவிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.  தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும். 2,87,250 தொழிலாளர்களுக்கு ரூ.216.38 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |